நீ என்ன பெரிய ரஜினிகாந்த் ஆ, என கேட்டவருக்கு விஷ்ணு விஷால் பதிலடி

Vishnu Vishal
By Tony Jun 22, 2026 06:30 AM GMT
Report

விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, ராட்சன், ஜீவா, வென்னிலா கபடி குழு என இவர் நடித்த தரமான படங்களை அடுக்கிகொண்டே போகலாம்.

இந்நிலையில் விஷ்ணு நடிப்பில் சில வருடம் முன்பு வெளிவந்து செம ஹிட் அடித்த படம் கட்டாகுஸ்தி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜுலை 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

நீ என்ன பெரிய ரஜினிகாந்த் ஆ, என கேட்டவருக்கு விஷ்ணு விஷால் பதிலடி | Vishnu Vishal Latest Speech Gone Viral

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு பல சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார்.

அப்போது ஒரு நாள் ஒரு இயக்குனர் போன் செய்த போது என்னால் எடுக்க முடியாமல் போனது, அப்போது அவர் என்னிடம் நீங்க என்ன பெரிய ரஜினியா? சூர்யாவா? போன்-யை எடுக்கல என கேட்க, எனக்கு கோபம் தலைக்கு ஏறி, நீங்க என்ன ஷங்கரா? இல்லை மணிரத்னமா? என திருப்பி கேட்டுவிட்டேன் என விஷ்ணு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.