அன்று டீ பாய், ரூம் கிளீனிங்... இன்று ரூ.1200 கோடி சொத்துக்கு அதிபதியான அஜித் பட வில்லன்..
நடன இயக்குநர் ஃபாரா கான்
பாலிவுட் சினிமாவில் நடன இயக்குநராக திகழ்ந்து தமிழில் விஜய் அஜித் உள்ளிட்ட பலருக்கும் நடனம் சொல்லித்தந்து பிரபலமானவர் தான் நடன இயக்குநர் ஃபாரா கான். ஷாருக்கான் தொடங்கி பல சூப்பர் ஸ்டார்களின் பேவரைட் டான்ஸ் மாஸ்டாராக திகழ்ந்த ஃபாரா கானிடம், 2000ல் தேசிய விருது வென்றவரின் மகனும் முன்னணி நடிகரின் மகன் ஒருவர் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

அப்படி ஃபாரா கான் குழுவிலுள்ள நடன கலைஞர்களுக்கு டீ சப்ளை செய்தும் அவர்களின் அறைகளை சுத்தம் செய்தும், நடன ஒத்திகை அறைகளை சுத்தம் செய்தும் படிப்படியாக பயிற்சி எடுத்து சினிமாவில் அடியெடுத்து வைத்து அப்படியே நடிப்பில் ஆர்வம் கொண்டு ஒரு படத்தில் நடித்தார். ஒரே இரவில் பாலிவுட் சினிமா கொண்டாடும் நட்சத்திரமாக மாறினார் அந்த இளைஞர். சுரேஷ் ஒப்ராயின் மகன் விவேக் ஓபராய் தான் அந்த இளைஞர்.
விவேக் ஒபராய்
அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஒபராய், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சினிமாவில் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா ராயுடனான காடல், அதற்கு சல்மான் கான் எதிர்ப்பு என பிரச்சனைகளில் சிக்கியதால் சில காலம் சினிமா வாய்ப்பில்லாமல் இருந்தார்.

வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் நிலைக்கு வந்த விவேக் ஒபராய் 3 ஆண்டுகள் எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரத்தொடங்கிய விவேக் ஒபராய் மீண்டும் சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தினார். சினிமாவை தாண்டி பிசினஸ் பக்கமும் தீவிர கவனம் செலுத்திய விவேக் ஒபராய், செல்வ செழிப்பான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்.
சொத்து மதிப்பு
ஒரு பேட்டியில், தனக்கு 19 வயது இருக்கும் போது, அதாவது சினிமாவில் நடிக்கும் முன், பங்குச்சந்தை கம்பெனி ஒன்றை நடத்தி 12 கோடி ரூபாய் திரட்டி முதலீடு செய்தேன். 23 வயதில் அந்த கம்பெனியை விற்றதில் பல கோடி கிடைத்ததாகவும், ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, நிதித்துறை போன்றவற்றிலும் பிசினஸ் செய்து, ஒரு நாளை 16 மணிநேரம் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது துபாய்க்கு இடம்பெயர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 7 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1200 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.