இனிமே அது வந்தா என்ன, வரலனா என்ன? அஞ்சனாவை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே

Anjana Rangan VJ Anjana
By Parthiban.A Dec 08, 2021 01:00 PM GMT
Report

முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் அஞ்சனா. திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்டார் அவர். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

அஞ்சனா எப்போதும் இன்ஸ்டாகிராமில் அவரது அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார். சோப்பு விளம்பரத்தில் வருவது போல இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவா.. நம்பவே முடியலையே என்று தான் அவரது புகைப்படங்கள் எல்லாமே இருக்கும்.

தற்போது ரசிகர்களின் சில கேள்விகளுக்கு அஞ்சனா இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து இருக்கிறார். அப்போது ஒருவர் "Dream husband Expectations" என்ன என கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அஞ்சனா "எனக்கு ஏற்கனவே கணவர் இருக்கிறார். இனிமே dream வந்தா என்ன, வரலனா என்ன" என பதில் அளித்து இருக்கிறார்.

அவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது கேள்வி கேட்ட நபருக்கு தெரியாது போல. இல்லை அவரும் சோப்பு விளம்பரம் போல அவர் தோற்றத்தை பார்த்து அப்படி நினைத்துவிட்டாரோ என்னமோ.

இனிமே அது வந்தா என்ன, வரலனா என்ன? அஞ்சனாவை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே | Vj Anjana Dream Husband Expectations