சிவகார்த்திகேயன் அப்படிப்பட்டவர் தான்.. வெளிப்படையாக பேசிய VJ பாவனா..
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போதைய மாஸ் ஹீரோவாக புது அவதாரம் எடுத்து வருபவர் தான் சிவகார்த்திகேயன். தென்னிந்திய சினிமாவில் விஜய்க்கு பின் அதிக மார்க்கெட்டை வைத்துள்ள சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமா பயணத்தில் சிவகார்த்திகேயன் பல விமர்சனங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இணைந்து தொகுத்து வழங்கி வந்த விஜே பாவனா அவர் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
VJ பாவனா
அதில், சிவகார்த்திகேயனின் போராட்ட குணம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். துரோகம், வளர்ச்சியை தடுப்பது என்று அவருக்கு யாராவது செய்தால்கூட அதையெல்லாம் உடைத்து பல மடங்கு வளர்ச்சியடைந்து சாதித்துவிட்டு, மீண்டும் அவர்களுடன் அன்புடன், இயல்பாக பழகுவார்.
கெடுதல் நினைப்பவர்கலுக்கு அவர் அப்படித்தான் பதிலடி கொடுப்பார். அதுதான் சிவகார்த்திகேயனின் போராட்ட குணம். எனக்கு அவருடைய இந்த கேரக்டரை பார்க்கும்போது வியப்பாக இருக்கும் என்று விஜே பாவனா அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.