மீண்டும் வெடிக்கும் சித்ராவின் தற்கொலை வழக்கு- சிக்கும் விஜய் டிவி பிரபலம்

Serials
By Yathrika Oct 18, 2022 10:25 AM GMT
Report

மறைந்த நடிகை சித்ரா

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சித்ரா. அந்த கதாபாத்திரத்திற்காக நிறைய மெனக்கெடுத்து நடிப்பார், அழகான புடவைகளை தேர்வு செய்து அணிவார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார், திடீரென ஏன் இந்த முடிவு, என்ன காரணம் என்பது இப்போது வரை தெரியவில்லை.

இந்த நிலையில் அவரது மரணத்திற்கு பின்னால் திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அவருக்கு விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் மற்றும் அண்ணா நகரில் மெஸ் நடத்தும் குறிஞ்சி செல்வனும் நிறைய தொல்லை கொடுத்ததாக ஹேமந்த் கூறியுள்ளார்.

அதற்கான ஆதாரம் சித்ராவின் நண்பர் ரோஹித்திடம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் வெடிக்கும் சித்ராவின் தற்கொலை வழக்கு- சிக்கும் விஜய் டிவி பிரபலம் | Vj Chithra Suicide Case