பாம்புக் கடியால் உயிருக்கு போராடிய தம்பி!! ரமணா பட பாணியில் நடிகைக்கு நடந்த கொடுமை..
விஜே தீபிகா
விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் விஜே தீபிகா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பாம்பு கடித்த தம்பியை தனியார் ஹாஸ்பிடலில் விஜயகாந்த் நடித்த ரமணா பட பாணியில் நடத்தப்பட்ட ட்ரீட்மெண்ட் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், தம்பிக்கு சில மாதங்களுக்கு முன் பாம்பு கடித்துவிட்டதால் உடனே அண்ணா நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். அங்கு பாம்பு கடிக்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க சரியான வசதிகள் இல்லாமல் இருந்தது.

ஆனாலும் அதை முதலில் சொல்லாமல், ட்ரீட்மெண்ட் பார்க்கிறோம் என்று சொல்லி 30 ஆயிரம் பணத்தை கட்டச்சொன்னதால் பணத்தை கட்டினோம். பின் அங்கே டாக்டர் ஓடிக்கொண்டே இருந்தார்கள். அந்த டெஸ் இந்த டெஸ்ட் என்று எடுத்துவிட்டு கடைசியாக இங்கு ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்து டாக்டர்ஸ், சிஸ்டர் செய்வதை பார்த்து சந்தேகம் வந்தது.
ரமணா பட பாணி
இங்கே இதற்கான சரியான ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்டதற்கு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி, கடைசியாக முடியாது வேற ஆஸ்பிடலுக்கு போங்க என்று சொன்னதால் கோபம் வந்தது. ஆம்புலன்ஸ் ரெடி பண்ண முடியுமா என்று கேட்டதற்கு, சில ப்ரோசிஜர் இருக்கு, வெயிட் பண்ணுங்க என்று சொன்னார்கள்.
தம்பி உயிருக்கு போராடும்போது ஆஸ்பிட்டலில் நடந்து கோபத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்களை அடித்து விடலாம் போல் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் தன்னுடைய காரிலேயே தம்பியை வேறொரு ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் 3 நாள் ட்ரீட்மெண்ட்க்கு பின் தம்பி உயிர் காப்பாற்றினோம்.
உயிருக்கு போராடும்
நேரத்தில் சில ஆஸ்பிட்டலில் பணத்துக்காக
இதுபோல் அலட்சியமா நடந்துக்கிறாங்க,
பொதுவாக டாக்டஸ் என்றாலே மரியாதையும்,
அவங்கள கையெடுத்து கும்பிட தோணும்,
ஆனால் ஒருசொலர் இதுபோல் பணத்துக்காக
செய்யும் செயலை பார்த்து வருத்தமாகவும்
கோபமாகவும் வருகிறது என்று தீபிகா
தெரிவித்துள்ளார்.