எனக்கும் KPY பாலாவுக்கும் இந்த பிரச்சனை இருக்கு!! மேடையில் மணிமேகலை சொன்ன உண்மை..

KPY Bala Manimegalai
By Edward Jul 05, 2025 04:15 PM GMT
Report

KPY பாலா

கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி அடுத்த நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் KPY பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் பாலா.

அதன்பின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். தான் சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

எனக்கும் KPY பாலாவுக்கும் இந்த பிரச்சனை இருக்கு!! மேடையில் மணிமேகலை சொன்ன உண்மை.. | Vj Manimeghalai Kpy Bala Secret Issues

இந்நிலையில், தன்வீர் தயானந்தா யோகி அவர்களின் ஆடியோ மற்றும் புத்தக வெளியீட்டின் போது பாலா மற்றும் மணிமேகலையை கெளவுரவித்துள்ளனர். நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கியிருந்தார்.

ஒரு பிரச்சனை

அப்போது மணிமேகலை அங்கிருந்த யோகி குருஜியிடம், எனக்கும் பாலாவிற்கு ஒரு பிரச்சனை இருக்கு, அடிக்கடி டிப்ரஸ் ஆவோம், எதுக்கு டிப்ரஸ் ஆவோம்னு தெரியாது. அதன்பின் உங்களை சந்திக்கிறோம்.

நல்ல ஆசீர்வாதம் கொடுத்து நல்லபடியா வரவேண்டும் என்று சொல்லுங்கள் என்று மணிமேகலை கூறியிருக்கிறார். அதற்கு பாலா, மணிமேகலை, நாம நல்லா இருக்கணும்னு டிப்ரஸ் ஆவாங்க, அதன்பின் நாம நல்லா இருக்கோமான்னு டிப்ரஸ் ஆவாங்க என்றும் மணி அக்காவுக்கு ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார் பாலா.