மணிமேகலை சொத்து மதிப்பு இத்தனை கோடியா!! வீடியோவில் உளறிய அவரின் அம்மா..
VJ மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் VJ மணிமேகலை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை குக் விக் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக பணியாற்றினார். நிகழ்ச்சியின் போது பிரியங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் மணிமேகலை யூடியூப் சேனலில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மணிமேகலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் மணிமேகலை தொகுப்பாளினியாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும், யூடியூப் சேனல் மூலம் ரூ. 40 கோடி சொத்தினை சேர்த்துள்ளாராம்.
40 கோடி ரூபாய்
சமீபத்தில் மணிமேகலை கணவர் ஹுசேன் வெளியிட்ட வீடியோவில், அவரது அம்மா எல்லாமே சேர்த்து கண்டிப்பா 40 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கு மணிமேகலை, எம்மா சும்மா இரும்மா என்று ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
அப்படியென்றால் மணிமேகலை 40 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பது உண்மைதான் போல என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.