கல்யாண நாள் அதுவும் இப்படியொரு குத்து டான்ஸா!! கணவரை வெறுப்பேற்றிய VJ பிரியங்கா..

Priyanka Deshpande Star Vijay Tamil Actress Actress
By Edward Apr 16, 2026 04:45 AM GMT
Report

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையோடு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார் பிரியங்கா.

முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிய, சில ஆண்டுகளாக அம்மா, சகோதரர் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் பிரியங்கா. கடந்த ஆண்டு பிரபல டிஜே வசி என்பவருடன் திருமணத்தை முடித்தார் பிரியங்கா.

கல்யாண நாள் அதுவும் இப்படியொரு குத்து டான்ஸா!! கணவரை வெறுப்பேற்றிய VJ பிரியங்கா.. | Vj Priyanka 1St Year Anniversary Video With Husb

திருமணமாகிய பிரியங்கா தன்னுடைய வேலைக்காக சென்னையும், வசி லண்டனிலும் வசித்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் இருவரும் சந்தித்து தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று ஏப்ரல் 16 ஆம் தேதியோடு திருமணமாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளனர். முதலாம் ஆண்டு திருமண நாளை லண்டனில் தன் கணவருடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார் பிரியங்கா. அப்போது குத்து பாட்டுக்கு வெளிநாட்டில் ஆடியபடி வீடியோவை பகிர்ந்து தன் கணவருக்கு Happy anniversary வாழ்த்தை தெரிவித்துள்ளார்.