என் மகன் முன் குட்டையாடை அணிவேன்!! நடிகை பரீனா அசாத் ஓபன் டாக்..
சீரியல் நடிகைகள் எப்போதும் மக்களிடம் மிகவும் ஸ்பெஷல் தான். வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி சின்னத்திரை நடிகைகள் தான் அதிகப்படியான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று வருகிறார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் தான் பரீனா அசாத்.

வெண்பா என்ற கதாபாத்திரத்தில் பயங்கர வில்லியாக நடித்தவர் இப்போது அவ்வளவாக சீரியல் பக்கம் காணவில்லை. தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.
குட்டையாடை
சமீபத்தில் பரீனா அளித்த பேட்டியில், என் மகன் முன்பு நான் ஷார்ட்-ஆன ஆடையணிவேன். அவன் அதை இயல்பான ஒன்றாக பார்த்து வளர்ந்தால், வெளியே அதே மாதிரி உடையணிந்துள்ள பெண்களை பார்த்தாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக்கொள்வான்.

ஒரு பெண்ணின் குணத்தை அவர் ஆடையும் உடையை வைத்தும் மதிப்பிடக்கூடாது என்பதை குழந்தைகள் சிறு வயதில் இருந்தே புரிந்து கொள்ளவேண்டும்.
ஆண் குழந்தைகளை சரியான மதிப்புகள், புரிதல்களுடன் வளர்த்தால், பெண்களை பற்றிய தவறான எண்ணங்கள் அல்லது முன்முடிவுகள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று பரீனா அசாத் தெரிவித்துள்ளார்.