நான்கே மாதத்தில் சீரியலில் இருந்து துறத்த இதுதான் காரணம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா ஓப்பன்

serial television pandianstores deepika saaigayathri
By Edward Sep 16, 2021 05:44 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி தொடரில் முக்கியமான சீரியலாக தற்போது டிரெண்ட்டாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதரர்களின் அன்பை வெளிகாட்டும் கதைகளமாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் மாறி மாறி நடிக்க வைத்து வருகிறார்கள். விஜே சித்ராவிற்கு பதில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியாவும் நடிக்க வைத்து பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில் கண்ணன் காதலித்து வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடிகை வைஷாலி நடித்தார். இதையடுத்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். திடீரேன அந்த கதாபாத்திரத்தில் இருந்தும் சீரியலில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். அவருக்கு பதில் ஈரமான ரோஜா சீரியலில் நடித்த நடிகை சாய் காயத்ரியை நடிக்க வைத்துள்ளனர்.

சீரியலில் இருந்து விலக என்ன காரணம் என்று சமீபத்திய பேட்டியொன்றில் உண்மையை கூறியுள்ளார். எனக்கும் சேனலுக்கு தொடர்பு இருக்காது. தயாரிப்பாளர்களுடன் கூட நான் பேச தயங்குவேன். சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் முடிந்த பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க வாய்ப்பு கிடைக்க 2 நாள் காத்திருந்தேன். மார்ச் 8 2021ல் நடிக்க ஆரம்பித்தேன். இடையில் என்னுடைய முகத்தில் இருக்கும் முகப்பருக்களை சரி செய்ய கிட்டத்தட்ட 3 மாதங்கள் கொடுத்தனர்.

அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், மேக்கப் போடும் போது அதன் தாக்கம் அதிகமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் நடிகைகள் உடல் எடையை குறைந்த அதிகமான இருக்கும் நடிகைகள் கூட நடித்து வருகிறார்கள். மற்ற எந்த காரணத்தை கொண்டு சீரியலில் நடிக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். முகப்பருவை வைத்து வெளியேற்றியதுதான்.

முகப்பரு இருப்பது தவறு இல்லையே முகம் என்றால் பருக்கள் வரத்தானே செய்யும் என்று கூறியுள்ளார். சேனலையும் நான் தவறு கூறமாட்டேன். என்னை சரி செய்ய அவர்கள் கொடுத்த நேரத்திற்குள் என்னால் சரிசெய்ய முடியாமல் போனது தான் இதற்கு காரணம் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகை தீபியா.

தற்போது அந்த சீரியலில் நடிகை சாய் பல்லவி நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருவது குறித்து பேசிய தீபிகா, என்னையும் அப்படித்தான் கூறினார்கள். கதாபாத்திரத்தை என்னி வயதை சீரியலில் பார்க்க கூடாது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.