ஒரே நாளில் சென்சேஷனல் நடிகையான கெளரி கிஷன்!! இவர் யார் தெரியுமா?

Gouri G Kishan Tamil Actress Actress
By Edward Nov 09, 2025 09:30 AM GMT
Report

கெளரி கிஷன்

நடிகை கெளரி கிஷன் நடித்துள்ள Others என்ற படத்தின் நிகழ்ச்சியில் பேசும்போது யூடியூபர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடும் கோபமாகி வாக்குவாதம் ஆனது. ஹீரோவிடம் செய்தியாளர் 'ஹீரோயினை தூக்குனீங்களே அவங்க எடை எவ்வளவு' என கேள்வி கேட்டிருக்கிறார்.

ஒரே நாளில் சென்சேஷனல் நடிகையான கெளரி கிஷன்!! இவர் யார் தெரியுமா? | Who Is Actress Gouri G Kishan Internet Sensation

இதை கேட்டு கடுப்பான கௌரி அந்த யூடியூபரை சரமாரியாக கேள்வி கேட்டார். தற்போது இந்த பிரச்சனை பெரிதாகி, பிரபலங்கள் பலரும் கெளரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பில் அவதூறான கேள்வி கேட்டதற்காக நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரினார்.

இதனையடுத்து கெளரி கிஷனின் இந்த போல்ட்டான செயலுக்கு, பாலிவுட் மீடியாக்கள் முதல் நடிகைகள், சினிமா சங்கத்தினர் உட்பல பலரும் ஆதவளித்து வருகிறார்.

இவர் யார்

இந்நிலையில் கெளரி கிஷன் யார் இவர் என்று பலரும் தேடி வருகிறார்கள். 96 படத்தில் குட்டி ஜானுவாக அனைவரும் பார்த்திருப்போம். கேரளாவில் பிறந்தாலும் சென்னையில் தான் கெளரி கிஷன் தன் வாழ்வில் பெரும்பாலான நாட்களை வாழ்ந்திருக்கிறார்.

ஒரே நாளில் சென்சேஷனல் நடிகையான கெளரி கிஷன்!! இவர் யார் தெரியுமா? | Who Is Actress Gouri G Kishan Internet Sensation

பெங்களூருவில் இருக்கும் க்ரைஸ்ட் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார். மலையாளம் தாய் மொழியாக இருந்தாலும் தமிழும் நன்றாக பேசக்கூடியவர் கெளரி கிஷன். 96 படத்திற்கு பின் மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது அதர்ஸ் படத்தினை தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் கெளரி கிஷன். இதுவரை எந்த நடிகையும் பேசாத விஷயத்தை தைரியமாக பேசி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கெளரி கிஷன்.