பவன் கல்யாணை பார்த்தாலே பயமா இருக்கும்!! காரணத்தை உடைத்த தொகுப்பாளினி சுமா கனகலா...

Pawan Kalyan Tamil TV Shows
By Edward Nov 09, 2025 08:30 AM GMT
Report

VJ சுமா கனகலா

தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்களின் ஆடியோ லான்ச் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர்தான் சுமா கனகாலா. வசீகரமான பேச்சு, இயல்பான உரையாடல்களுடன் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சுமா.

பவன் கல்யாணை பார்த்தாலே பயமா இருக்கும்!! காரணத்தை உடைத்த தொகுப்பாளினி சுமா கனகலா... | Suma Kanakala Discusses Pawan Kalyan Events

சமீபத்தில் சுமா அளித்த பேட்டியொன்றில், பவன் கல்யாண் நிகழ்ச்சிகள் குறித்து பேசிய கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பவன் கல்யாணை பார்த்தாலே பயம்

அதில், பவன் கல்யாண் நிகழ்ச்சிகள் என்றால் எனக்கு பயமாக இருக்கும். அவரது ரசிகர்களின் உற்சாகத்திற்கு எல்லையே இல்லை. அதனால், நிகழ்ச்சி முடிந்து எப்படி வெளியேறுவது என்று நான் முன்பே திட்டமிட்டுக்கொள்வேன்.

பவன் கல்யாணை பார்த்தாலே பயமா இருக்கும்!! காரணத்தை உடைத்த தொகுப்பாளினி சுமா கனகலா... | Suma Kanakala Discusses Pawan Kalyan Events

பவன் கல்யாண் பேசத் தொடங்கியதும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து, மேடை நோக்கி ரசிகர்கள் திரண்டு வருவதை பார்த்தேன்.

அந்த சமயத்தில் அங்கு இருப்பது ஒரு சாகசம் தான். கூட்டம் ஒருமுறை அதிகமாகிவிட்டால், நான் நசுக்கப்பட்டுவிடுவேன் என்பதால் தான் ஹீரோ பேசத்தொடங்கியதும், நான் மேடையிலிருந்து அமைதியாக நழுவிவிடுவேன். என்று சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.

மேலும், நான் எந்த சினிமா நிகழ்ச்சிக்கு சென்றாலும், முதலில் வெளியேறும் வழி எங்கே, ஜன்னல்கள் எங்கே, தேவைப்பட்டால் எந்த வழியாக வெளியேறலாம் என்று தான் பார்ப்பேன் என்று சுமா கனகலா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.