சரண்யா பொன்வண்ணனால் மேடையில் அவமானப்பட்டு கதறிய தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
தற்போது அம்மா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் படங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது பெற்ற சரண்யா சமீபத்தில் அறிமுக தயாரிப்பாளர் படத்தில் கமிட்டாகி நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சரண்யா பொன்வண்ணன் வரவில்லை.
இதனால் மேடையில் பேசிய தயாரிப்பாளர், சரண்யா மேடமை வைத்து தான் கதை அமையும் என்பதால் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும்.
காலில் கும்பிடுமளவிற்கு சரண்யாவை கூப்பிட்டு பார்த்தேன். ஆனால் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டம் இருந்ததால் என்னால் வரமுடியாது என்று அசாட்டாக தெரிவித்தார்.
இதுவே தனுஷ், சூர்யா படம் என்றால் இந்த காரணத்தை கூறி வராமல் இருப்பாரா என்று கூறி மேடையில் கதறி இருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்.