தனுஷின் ராயன் படத்துக்கு ஏன் தேசிய விருது!! காரணங்களை அடுக்கிய சீரியல் நடிகர்...

Dhanush Raayan National Film Awards
By Jai Jul 31, 2026 10:00 AM GMT
Report

தனுஷ்

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் நடிகராக ஜொலித்து வரும் நடிகர் தனுஷ், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ராயன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கும் தேசிய விருதுகளை அறிவித்துள்ளனர்.

தனுஷின் ராயன் படத்துக்கு ஏன் தேசிய விருது!! காரணங்களை அடுக்கிய சீரியல் நடிகர்... | Why Did Dhanushs Raayan Win National Award Actor

இதனை பார்த்த பலரும் ராயனுக்கும், கேப்டன் மில்லருக்கும் தேசிய விருது கொடுக்கும் அளவிற்கு அப்படத்தில் ஒன்றும் இல்லை, தகுதியான பல படங்கள் இருக்கிறது என்று ஜூரிக்களில் ஒருவரான கலா மாஸ்டரை விமர்சித்து வந்தனர். சமீபத்தில் நடந்த ரசிகர்கள் நல உதவி நிகழ்ச்சியில் தனுஷ், ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள், தட்டிவிடாதீர்கள் தட்டிக்கொடுங்கள் என்று பேசியிருந்தார்.

வேணு அரவிந்த்

இந்நிலையில் சீரியல் நடிகரும் விமர்சகருமான வேணு அரவிந்த் பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ராயன் படத்திற்கு ஏன் தேசிய விருது? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதுதொடர்பான மீம்ஸ்களை பார்க்கிறேன். ஏன் ஜூரிக்கள் அப்படத்திற்கு விருது கொடுத்தார்கள் என்று எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். முதலில் ராயன் படத்திற்கு கிடைத்திருக்கும் விருது சிறந்த தமிழ் பட பிரிவில். ராயன் ஒரு பாதுகாப்பான கமர்ஷியல் படம் இல்லை.

தனுஷின் ராயன் படத்துக்கு ஏன் தேசிய விருது!! காரணங்களை அடுக்கிய சீரியல் நடிகர்... | Why Did Dhanushs Raayan Win National Award Actor

படத்தின் அறிமுக காட்சி எல்லாம் ரொம்பவே நார்மலாக இருக்கும். இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அனைத்து விமர்சனங்களிலும் பொதுவாக இருந்தது என்ன என்றால் ரஹ்மானின் பிஜிஎம் பாடல்கள் சூப்பர் என்பதுதான். ஓம் பிரகாஷின் கேமராவும் சூப்பராக இருந்தது.

இவையனைத்தும் சிறப்பாக இருந்தாலும் 2வது பாதியும், கிளைமேக்ஸும் வீக் என்று எல்லோரும் உணர்ந்தார்கள். ராயன் அனைத்திலும் சிறந்த படம் என்று கொடுக்கவில்லை, ராய் கிராஃப்ட், டிரைக்‌ஷனல் போன்றவற்றிற்கு கொடுத்த மாதிரிதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.