இன்னொருத்தருடைய புருஷனை பங்கு போட்டது தப்புதான்! பாலுமகேந்திரா மனைவி மெளனிகா..
பாலுமகேந்திரா மனைவி மெளனிகா
மறைந்த பிரபல இயக்குனர் பாலு மகேந்திரனின் இரண்டாம் மனைவியாக தற்போது சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை மெளனிகா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாலு மகேந்திரா, தன்னிடம் வாங்கிய சத்தியத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், எனக்கு ஏற்பட்ட அவமானம், வலிகள், என்னை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து மீண்டு வந்ததற்கு காரணம் என் குடும்பம் தான். உன்னால முடியும், இதையா உன் கிட்ட அவர் சொல்லிட்டு போனாரு.
2 சத்தியம்
அவர்(பாலு மகேந்திரா) இறக்கும் முன் இரண்டு சத்தியம் வாங்கினார். நான் இறந்தப்பின் உனக்கு பிடித்த படம், இயக்குனர்களுடன் படம் பண்ண வேண்டும் என்றும் இன்னொரு சத்தியம் என்றால் நான் இறந்தபின் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டும்.
உனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சத்தியம் வாங்கினார். நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றுலாம் நான் சொல்லவில்லை. என் மனம் அதற்கு ரெடியாகனும், ரெடியாகாமல் ஒருவரை கல்யாணம் செய்தால், அவருக்கு சரியாக இருக்காது, எனக்கும் சரியாக இருக்காது.
அது ரெடியாக, இன்று ஆகலாம், ஒரு வருடம் ஆகலாம், ஆகாமலும் போகலாம். படத்தில் நடிக்கிறேன், ஆனால் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியம் கொடுக்க மாட்டேன் என்று பாலு மகேந்திராவிடம் கூறிவிட்டேன்.
பங்கு போட்டது தப்பு
இன்னொருத்தருடைய புருஷனை பங்கு போட்டது தப்பு தான், ஆனால் அந்த தப்பான வாழ்க்கையை சரியாக வாழ்ந்தேன். அவருக்கு கொடுக்க வேண்டிய, எல்லா மரியாதையும் நான் கொடுத்தேன், எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர் கொடுத்தார்.
அப்படி வேறொருவரை அவர் இடத்தில் பொறுத்தி வைத்து பார்க்க முடியாது. ஆண் - பெண் சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கையில்லை, அதை மீறி வாழ்க்கை இருக்கிறது என்று மெளனிகா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.