டார்ச்சர் செய்த இளைஞர்! லைவ்வில் ஓங்கி பளார் விட்ட பெண் செய்தியாளர்

Viral Video Pakistan Trending Videos
By Edward Jul 13, 2022 11:26 AM GMT
Report

பக்ரீத் பண்டிகையையொட்டி பல தொலைக்காட்சி சேனல்கள் மக்களிடம் சென்று செய்தி வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் பாகிஸ்தானின் லாகூரில் ஒரு பெண் செய்தியாளர் செய்தியை வழங்கிக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த இளைஞர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சர்ச்சையானதை அடுத்து அந்த பெண் செய்தியாளர் அறைந்ததற்காக காரணத்தை கூறியுள்ளார். வேலை செய்யும் போது இடையூறு செய்தாதாவும், இந்த காட்சி கேமராவில் பதிவானது எனக்கு தெரியாது. பேட்டியின் போது குடும்பத்தை தொந்தரவு செய்ததாகவும் கலங்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நான் விளக்கியும் அவன் அந்த செயலை செய்து வம்புக்கு இழுத்தான். அதனால் தான் அப்படி செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது 6 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்று வருகிறது.