ஆமா நீ யாரு!! பத்திரிக்கையாளர் கேள்வியால் கோபமடைந்த யோகி பாபு..

Yogi Babu
By Edward Jan 30, 2023 09:02 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தி பிடித்துள்ளவர் நடிகர் யோகி பாபு. பெரிய பட்ஜெட் மற்றும் சிறு பட்ஜெட் படங்களில் இவர் நடித்தால் போது என்று பலர் வரிசைக்கட்டி நின்று வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய பங்காற்றினார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் பிஸியாகும் அளவிற்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் பொம்மை நாயகி என்ற படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஆமா நீ யாரு!! பத்திரிக்கையாளர் கேள்வியால் கோபமடைந்த யோகி பாபு.. | Yogi Babu Upset Unwanted Questions Promotions

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய யோகி பாபுவிடம், பெரிய பட்ஜெட் படங்களின் பிரமோஷனுக்கு மட்டும் செல்கிறீர்கள் சிறிய பட்ஜெட் படங்களின் பிரமோஷனுக்கு செல்வதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்.

அதற்கு கோபமடைந்த யோகி பாபு, யார் நீ, இந்த படமும் சிறு பட்ஜெட் படம் தான் என்றும் வாரிசு படம் பெரிய பட்ஜெட் தானே. அந்த ஆடியோ லான்சிற்கும் நிறைய படங்களின் ஆடியோ லான்ச்சிற்கு செல்லவில்லையே என்று கூறியுள்ளார்.

மேலும், எல்லா இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியும் என்னுடைய சூழ்நிலை எப்படி என்று, நானும் சின்ன நடிகராக இருந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் யோகி பாபு.

Gallery