என்ன, ஓவியா பாதியா வந்திருக்கு!! பூமர் அங்கிள்-ஆக மாறிய காமெடி நடிகர்.. வீடியோ..
Oviya
Yogi Babu
By Edward
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் நடிகராக திகழ்ந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு.
வில்லனுடன் காமெடி செய்யும் அடியாலாக நடிக்க ஆரம்பித்து, தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய ரோலில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
மேலும் அவரை முக்கிய ரோலில் நடிக்க வைத்து படங்களும் வெளியாகி வருகிறது. அப்படி இயக்குனர் ஸ்வதீஷ் என்பவரின் இயக்கத்தில் பூமர் அங்கிள் என்ற படத்தில் வெளிநாட்டு நடிகையுடன் சேர்ந்து நடித்துள்ளார் யோகி பாபு.
அப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல ஆண்டுகள் கழித்து நடிகை ஓவியாவும் இப்படத்தின் சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் யோகிபாபு அனைவரையும் கலாய்த்துள்ள டிரைலர் வீடியோ வைரலாகி வருகிறது.