வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போன இளம் நடிகைகள்! க்ளாமர் காட்டியும் இப்படியா?

Anjali Lakshmi Menon Nithya Menen Shruti Haasan Varalaxmi Sarathkumar
By Edward May 19, 2022 08:10 AM GMT
Edward

Edward

Report

சினிமாவை பொருத்தவரை இந்த நவீனகாலத்தில் நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்க க்ளாமர் ஒன்றுதான் தற்போது பயன்படுகிறது. அப்படியாக குடும்பபாங்கான நடிகையாக களமிரங்கி வாய்ப்புகள் அடுத்தடுத்து காணாமல் சென்றுள்ளனர் ஒருசில தமிழ் இளம் நடிகைகள். ஆனால் சிலர் க்ளாமர் காட்டியு ஒர்க்கவுட் ஆகாமல் சினிமாவையே விட்டு சென்றுவிடும் அளவிற்கு ஆளே காணாம் போய்விடுவார்கள்.

அந்தவரிசையில் முதல் ஆளாக இருந்த இளம் நடிகை தான் கயல் ஆனந்த். கயல் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த ஆனந்தி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் பெரியளவில் பேசப்படாமல் வந்தார். ஒருகட்டத்தில் க்ளாமரில் நடிக்க ஆரம்பித்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனது இதனால் திருமணம் செய்து கொண்டார். பின் ரீஎண்ட்ரி கொடுக்க நினைத்தும் வாய்ப்புகள் தேடி வரவில்லை.

கும்கி படத்தின் மூலம் மக்கள் மனதை ஈர்த்தவர் லட்சுமி மேனன். பள்ளிப்பருவத்தில் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார். ஆனால் பள்ளி படிப்பினை முடிக்க சில காலம் எடுத்துகொண்டு மீண்டும் வந்தார். இதற்காக போட்டோஷூட் எடுத்து வாய்ப்பினை தேடினார். க்ளாமர் பக்கம் போனால் சுத்தமாக செட்டாகாது என நினைத்து சினிமா வாய்ப்பே இல்லாமல் காணாமல் போய்விட்டார்.

திறமையான நடிகை என்றுபெயர் எடுத்தாலும் வாய்ப்புகள் கிடைக்காத நடிகையாக திணறியவர் நடிகை நித்யா மேனன். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் க்ளாமர் காட்டியும் தகுந்த படவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சர்ச்சை காட்சிகளில் கூட நடித்தார். அதுவும் செட்டாகாமல் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் போனார்.

வாரிசு நடிகையாக போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் க்ளாமராக நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி வாய்ப்புகள் கிடைக்காமல் வில்லி ரோலையும் கையில் எடுத்தார். இதனால் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் தமிழில் இருந்து தெலுங்கு பக்கம் திரும்பி சென்றுள்ளார்.

கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி பிரபலமான அஞ்சலி அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்த அஞ்சலி க்ளாமர் காட்டவும் தயாராகினார்.

பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அஞ்சலி போகப்போக வாய்ப்புகளை இழந்து வந்தார். சமீபத்தில் வாய்ப்பில்லாமல் வெப் தொடரில் ஓரின சேர்க்கையாளராக நடித்து சர்ச்சையில் சிக்கினார். இதன்பின் ஒருசில தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

கமல்ஹாசனின் வாரிசாக 3, 7 ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து டாப் இடத்திற்கு வந்தார் ஸ்ருதிஹாசன்.

இதன்பின் கொரோனா லாக்டவுன் வர கடைசியாக லாபம் என்ற படம் மட்டுமே வெளியாகியது. இதன்பின் வாய்ப்புகள் குறைய வெப் தொடர்களிலும் காதலருடன் ரொமான்ஸிலும் ஈடுபட்டு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி வருகிறார்.