யூத் படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Box office
Youth (2026)
By Kathick
அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இதன்பின், வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து கென் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் யூத். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் மூன்று நாட்களில் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மூன்று நாட்களில் யூத் திரைப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.