யுவனை அவமானப்படுத்திய வலிமை படக்குழு, கொந்தளித்த ரசிகர்கள்

Ajith Valimai Yuvan H.vinoth
By Tony Jan 09, 2022 05:30 AM GMT
Report

வலிமை தமிழ் சினிமா ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம்.

இப்படம் பொங்கலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், கொரொனா இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனால் வலிமை படம் இனி லாக்டவுன் எல்லாம் முடிந்து தான் வரும் என கூறிவிட்டனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் யுவன் பின்னணி இசை வினோத்திற்கு பிடிக்கவில்லை, அதனால் அவரை படத்திலிருந்து தூக்கிவிட்டனர் என ஒரு வதந்தி உலா வருகிறது. இது இப்படியே இருக்க வேண்டும், உண்மையாக கூடாது என்பது தான் ரசிகர்களின் ஆவல்.

ஆனால், வினோத்தோ ஜிப்ரானை வைத்து பின்னணி இசையை முடித்துவிட்டார் என்றும் ஒரு பக்கம் செய்தி பரவ யுவன், அஜித் காம்போ ரசிகர்கள் செம்ம அப்செட் தான்.