ஷமி, ஹார்திக்-ஐ தொடர்ந்து இன்னொரு விவாகரத்து..4 வருட மனைவியை பிரியும் யுஸ்வேந்திர சாஹல்..
Yuzvendra Chahal Divorce
கடந்த ஆண்டு முதல் பல விவாகரத்து செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் இது தொடர்கிறது. கடந்த ஆண்டு ஹார்திக் பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் தன்னுடைய மனைவியை திருமணம் செய்த 4 ஆண்டுகளில் பிரியவுள்ளாராம். அது யாரும் இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீரர் யுவேந்திர சாஹல் தானாம்.
கடந்த 2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தன்ஸ்ரீ வர்மாவை யுவேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார் யுவேந்திர சாஹல்.
அதிகாரப்பூர்வமாக இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில் இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.