சன் டிவியை அப்படியே காப்பி அடிச்ச ஜீ தமிழ்.. புது சீரியல் ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Zee Tamil Rajini serial Kayal Serial
By Parthiban.A Dec 09, 2021 05:30 AM GMT
Report

டிவி சேனல்கள் இடையே டிஆர்பி வார் நடந்துகொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். அதிலும் குறிப்பாக சன் டிவியின் ஆதிக்கம் தான் இருந்து வருகிறது. அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் விஜய் டிவி மற்றும் மூன்றாம் இடத்தில் ஜீ தமிழ் ஆகியவை இருக்கின்றன.

ஜீ தமிழ் டிவி போட்டிபோட்டுக்கொண்டு பல விதமான புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது ரஜினி என்ற பெயரில் ஒரு புது சீரியலை தொடங்கி இருக்கிறது அது. ஸ்ரேயா அஞ்சன் அதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இதன் ப்ரோமோவை ஜீ தமிழ் தற்போது வெளியிட்டு இருக்கும் நிலையில், அது அப்படியே சன் டிவியின் கயல் சீரியல் காப்பி என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஹீரோயின் செய்யும் வேலை மட்டும் தன வேற.. ஆனால் கதை, ஹீரோயின் குடும்பம், வெஸ்பா பைக், ஹெல்மெட் என பல விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ரஜினி சீரியல் ப்ரொமோ இதோ..

சன் டிவியை அப்படியே காப்பி அடிச்ச ஜீ தமிழ்.. புது சீரியல் ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Zee Tamil Rajini Serial Copy Of Kayal