விஜய் - திரிஷாவை கலாய்த்த தியான் சீனிவாசன் யார்? நண்பர் ஏன் முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார்.

Trisha Viral Video Actors C Joseph Vijay
By Jai Jul 21, 2026 10:45 AM GMT
Report

மலையாள நடிகர் தியான் சீனிவாசன், சமீபத்தில் நடந்த பட விழாவில், பேசியது தென்னிந்திய மீடியாக்களை தாண்டி பாலிவுட் மீடியாக்களையும் திரும்பி பார்க்க வைத்தது. தளபதி தமிழக முதல்வராக பதவியேற்ற நாளில் அந்த விழா நடந்த இடத்தில் முதல் வரிசையில் பட்டுச்சேலையில் அழகாக திரிஷா அமர்ந்திருந்தார். விஜய் பதவியேற்றபோது திரிஷா எமோஷனலாகி கண்ணீர் விட்டார்.

விஜய் - திரிஷாவை கலாய்த்த தியான் சீனிவாசன் யார்? நண்பர் ஏன் முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார். | Actor Dhyan Sreenivasan Who Is The Hot Topic

இதனை வைத்து திரிஷாவின் பெயரை குறிப்பிடாமல் தியான் சீனிவாசன், நான் முதல்வராகும் போது நவ்யா நாயர் பட்டுச்சேலை உடுத்தி முதல் ரோவில் உட்கார்ந்து கண்களில் கண்ணீர் இருக்கணும் என்றார். அவர் விஜய்யை தான் கலாய்க்கிறார் என்று பேசியபோதே தெரிந்தது.

இந்த விஷயம் வைரலானதை தொடர்ந்து அவரின் நண்பரும் நடிகருமான நடிகர் அஜு வர்கீஸ், 'சாரி விஜய் சார், என் நண்பன் பைத்தியம், அவன் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது' என்று மன்னிப்பு கேட்டார். அஜு சொன்னதுமே தியான் சீனிவாசன் நிச்சயம் சி எம் சாரை தான் அப்படி சொன்னார் என்று ரசிகர்கள் முடிவெடுத்து வைரலாக்கினார்.

விஜய் - திரிஷாவை கலாய்த்த தியான் சீனிவாசன் யார்? நண்பர் ஏன் முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார். | Actor Dhyan Sreenivasan Who Is The Hot Topic

தியான் சீனிவாசன் யார்

இந்நிலையில் இந்த விவகாரம் டிரெண்ட்டாக, தியான் சீனிவாசன் யார் என்று பலரும் தேடத் தொடங்கினர். தியான் மறைந்த பிரபல மலையாள நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான சீனிவாசனின் இரண்டாவது மகன். முதல் மகன் வினீத் சீனிவாசன் படங்களில் நடிப்பதுடன், இயக்கவும் செய்து வருகிறார், அவர் அமைதியானவர் என்ற பெயர் எடுத்துள்ளார்.

ஆனால் தியான் மனதில் பட்டதை பட்டுபட்டு என்று பேசிவிடுவதற்கு பேர் போனவர். தியான் பேட்டிகள், படவிழாக்களில் பேசினாலோ, அது கண்டிப்பாக வைரலாகிவிடும். இதுமல்லுவுட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும், ஆனால் அது தற்போதுதான் கோலிவுட் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.