இணையத்தில் கசியும் AI புகைப்படம்!! கொந்தளித்த நடிகை பிரியங்கா மோகன்..
பிரியங்கா மோகன்
தமிழில் டாக்டன், டான், எதற்கும் துணிந்தவன், சரிபோதா சனிவாரம், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.
சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியான ஓஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நடித்த பிரியங்கா தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார்.
AI புகைப்படம்
இந்நிலையில் பிரியங்காவின் AI தொழில்நுட்ப புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பார்த்து பிரியங்கா மோகன் ஒரு விளக்கத்தை இணையத்தில் கொடுத்துள்ளார்.
அதில், 'என்னைத்தவறாக சித்தரிக்கும் வகையில் AI-யில் உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகிறது. தயவுசெய்து அந்தப்போலி புகைப்படங்களை ஷேர் செய்வதையோ, பரப்புவதையோ நிறுத்துங்கள்.
AI-ஐ படைப்பாற்றலுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிற தவறான செயல்களுக்கு பயன்படுத்த அல்ல. நாம் எதைப் பகிர்கிறோம், எதை உருவாக்குகிறோம் என்பதில் கவனமாக இருப்போம்' என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.
Some AI-generated images falsely depicting me have been circulating. Please stop sharing or spreading these fake visuals. AI should be used for ethical creativity and not misinformation. Let’s be mindful of what we create and what we share. Thank you.
— Priyanka Mohan (@priyankaamohan) October 10, 2025