திருமணமான 2 வருடத்தில் விதவையான மனைவி!! 33 வயதில் தற்கொலை செய்த ஹார்டிக் ஹீரோ..
உதய் கிரண்
தெலுங்கு சினிமாவில் நடிகர் உதய் கிரணின் வளர்ச்சி எந்தளவிற்கு அபரிவிதமாக இருந்ததோ அதேபோல் அவரது வீழ்ச்சியும் கிட்டத்தட்ட வியத்தகு முறையில் அமைந்தது. 33 வயதே ஆன நடிகர் உதய் கிரண், 2014ல் ஹைதராபாத்திலுள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அவரது மனைவி விஷிதா, தன் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வெளியே சென்ற அந்த நேரத்தில் உதய் கிரண் தந்து நெருங்கிய நண்பர்களிடம் தான் மன சோர்வடைந்துள்ளேன், தற்கொலை செய்துக் கொள்ளப்போகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்டது.
33 வயதில் தற்கொலை
உதய் கிரணின் திடீர் டற்கொலைக்கு என்ன காரணம் என்று பலரும் யூகித்து வருகிறார்கள். அவரது மனைவி விஷிதா, சிறந்த ஹீரோவாக கொண்டாடிய தெலுங்கு சினிமா, அதன்பின் தனது உதய்-ஐ ஒதுக்கித்தள்ளியதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், பணப் பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் போலிஸிடம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் ஹாட்ரிக் ஹீரோ என்று அழைக்கப்படும் உதய் கிரண், தேஜா இயக்கத்தில் சித்ரம் படத்தில் அறிமுகமாகி நுவ்வு நேரு, மனசந்த நுவ்வே ஆகிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படங்களை கொடுத்தார்.
2001ல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தமிழில் 3 படங்கள் உட்பட மொத்தம் 19 படங்களில் நடித்திருக்கிறார் உதய் கிரண். காதல் படங்களில் நடித்து காதல் நாயகன் பிம்பத்தில் சிக்கியதால் தனக்கு வேறு வகையான கதாபாத்திர வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று உதய் கிரண் கவலைப்பட்டுள்ளார்.
