நின்றுபோன திருமணம்!! நிச்சய மோதிரத்தை கழட்டிய ஸ்மிருதி மந்தனா?ஷாக்காகும் ரசிகர்கள்..

Royal Challengers Bangalore Indian Cricket Team Marriage Smriti Mandhana
By Edward Dec 06, 2025 09:30 AM GMT
Report

ஸ்மிருதி மந்தனா

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஓடியை உலககோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இதை இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

நின்றுபோன திருமணம்!! நிச்சய மோதிரத்தை கழட்டிய ஸ்மிருதி மந்தனா?ஷாக்காகும் ரசிகர்கள்.. | Smriti Mandhana Ring Is Missing In The Hands Which

உலககோப்பையை வென்ற கையோடு தன்னுடைய காதலர் பலஷ் முச்சல் என்பவரை ஸ்மிருதி மந்தனா மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்தார். இவர்களின் திருமணம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்தது.

அதற்கான சடங்குகள் நடைபெற்ற நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நடக்காமல் போனது. இதனையடுத்து பலஷ் முச்சலும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ஸ்மிருதி மந்தனா வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார்.

நிச்சய மோதிரம்

இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கினார். மேலும் பலஷ் முச்சல் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தது. வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

நின்றுபோன திருமணம்!! நிச்சய மோதிரத்தை கழட்டிய ஸ்மிருதி மந்தனா?ஷாக்காகும் ரசிகர்கள்.. | Smriti Mandhana Ring Is Missing In The Hands Which

ஸ்மிருதி மந்தனா தரப்பில் திருமணம் குறித்து எதுவும் கூறாத நிலையில், பலஷ் முச்சல் குடும்பத்தினர் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறினர். தற்போது மீண்டும் சோசியல் மீடியா பக்கம் வந்த ஸ்மிருதி மந்தனா, டூத் பேஸ்ட் பிராண்ட் விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த விளம்பரத்தில் ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இருக்கவில்லை என்பது தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த விளம்பரம் நிச்சயதார்த்தத்திற்கு முன் எடுக்கப்பட்டதா? என்பதும் முழுமையாக தெரியவில்லை.