ஜப்தியான வீடு..தெருவில் தூங்கிய பிரபல நடிகை!! இப்போது பல கோடி சொத்துக்கு அதிபதி..
சினிமாவில் மட்டுமில்லை, சமயங்களில் அதில் நடிக்கும் கலைஞர்களின் வாழ்க்கைக்கூட திருப்பங்களால் நிறைந்தது. அப்படி ஒரு நடிகை தான், வாழ்வில் ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு, கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையால் நெருக்களில் தூங்கியிருக்கிறார்.
அதிலிருந்து மீண்டு தற்போது சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அந்த நடிகை. அந்த நடிகைதான் போஜ்புரி, இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரஷாமி தேசாய்.

ரஷாமி தேசாய்
பி-கிரேட் படங்களில் நடித்து வந்த ரஷாமி, பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து வாழ்க்கையையே மாற்றினார். சீரியலில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து பல விருதுகளை வாங்கிய ரஷாமி, 2006 - 2008ல் காலக்கட்டத்தில் இந்தியில் ஒளிப்பரப்பான ராவண் என்ற இந்தி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளை பெற்றார். 2003ல் தேசிய விருது வென்ற Kab Hoi Gawna Hamar என்ற போஜ்புரி படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
அக்ஷய் குமாரின் தபாங் 2 படத்தில் நடித்திருக்கிறார். ஒருக்கட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் வருமானம் நின்றுபோக மறுபுறம் கடன்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்தார். தெருக்களில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் ரஷாமி தேசாய்.

தெருக்களில் உறங்கினேன்
அவர் அளித்த பேட்டியில், நான் சீரியல் மற்றும் படங்களில் கோலோச்சிய நேரத்தில், வீடு ஒன்றை வாங்கினேன். வீட்டு கடன் உள்பட ரூ. 3.5 கோடி கடன் எனக்கு இருந்ததால் என்னால் அதைக்கட்ட முடியவில்லை, வாழ்க்கையே மாறியது.
அப்போது வீடு ஜப்தி செய்யப்பட்ட 4 நாட்களில் தெருக்களில் உறங்கினேன், என்னுடைய பொருட்களை என் மேனேஜர் வீட்டில் வைத்துவிட்டு என் குடும்பத்தில் இருந்து விலகி இருந்தேன். அப்போது 20 ரூபாய்க்கு உணவு வாங்கி சாப்பிட்டேன்.
எல்லாமே ஒரே நாளில் மாறியது. அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது. அப்போது விவாகத்து தொடர்பான வழக்கும் சென்று கொண்டிருந்தது என்று உருக்கமாக கூறினார்.
இப்படியான நெருக்கடிகளை சந்தித்த நடிகை ராஷ்மி தேசாய், அதில் இருந்து மீண்டு வந்து இன்று படங்களில் நடிக்க ரூ.2.5 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறார்.
பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தும் உயர் ரக கார்களை வைத்தும் இருக்கும் ரஷாமி தேசாயின் சொத்து மதிப்பு ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.