44 வயதிலும் யங்காக இருப்பதற்கு என்ன காரணம்... சினேகா டிப்ஸ்
சினேகா
அம்மாடியோ என்ன சிரிப்பு என ரசிகர்களை தனது அழகான சிரிப்பின் மூலம் கட்டிப்போட்டவர் தான் நடிகை சினேகா. சினிமாவில் பீக்கில் இருந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் சிறந்த கதாபாத்திரமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதேபோல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சொந்தமாக புடவை கடை போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார்.

இவர் சமீபத்தில் தனது டயட் பற்றிய சில டிப்ஸ் கூறியுள்ளார், அதை பார்ப்போம்.
எல்லா வகையான பயிற்சிகளையும் நான் செய்துள்ளேன். ஒவ்வொரு பயிற்சியுமே, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் எனக்கு பயன்தராது. அப்படி பயன் தரவில்லையென்றால், உடனே வேறு பயிற்சிக்கு மாறிவிடுவேன். அப்படி இப்போது எடைப்பயிற்சி எனக்கு பயனளிக்கின்றன.
தினமும் மிகக்குறைவான கலோரியே நான் எடுத்துக் கொள்வேன். அதில் மிகவும் கவனமாக இருப்பேன். சர்க்கரையையும் முற்றிலும் தவிர்த்துவிடுவேன். மாதம் ஒருமுறை, தோன்றினால் சர்க்கரை எடுத்துக் கொள்வேன்.

முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுவதே எனக்கு பிடிக்கும், துரித உணவுகளுக்கு ஸ்ட்ரிக்ட் நோ, மாதம் ஒருமுறை வெளியில் சாப்பிடுவோம் என கூறியிருக்கிறார்.