செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்!! கூலி பட நடிகை ரச்சிதா செய்த ரா செயல்..
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
ரச்சிதா ராம்
இப்படத்தில் வில்லி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரச்சிதா ராம். தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்த ரச்சிதா ராம் அக்டோபர் 3 ஆம்தேதி தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அதேநாளில் தன்னுடைய ரசிகர்களை அவரின் வீட்டிற்கு அருகில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ஒரு ரசிகர், ரச்சிதாவுடன் புகைப்படம் எடுக்க சென்றபோது அங்கிருந்த பவுன்சர்கள் உடனே அங்கிருந்து அனுப்ப முயன்றுள்ளனர்.
இதை பார்த்த ரச்சிதா, சரியாக புகைப்படம் எடுக்காத ரசிகரை மீண்டும் கூப்பிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி போஸ் கொடுத்துள்ளார். ரச்சிதா ராமின் இந்த செயல் கன்னட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படியும் ஒரு நடிகையா? என்று பாராட்டி வருகிறார்கள்.
[WVZZP9[