ஜனநாயகன் ரிலீஸ் இவங்க கைல தான் இருக்கு!! மறு தணிக்கை குழு கொடுத்த ஷாக்..
ஜனநாயகன் ரிலீஸ்
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ளது தான் ஜனநாயகன். பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் படம் தள்ளிப்போயுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தணிக்கை குழுவினர் மார்ச் 17 ஆம் தேதி ஜனநாயகன் படத்தை பார்த்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு சில மாற்றங்களை கூறி உடனே அதை செய்து சென்சார் சான்றிதழை வாங்கிவிடலாம் என்று ஜனநாயகன் படக்குழு எதிர்ப்பார்த்திருந்தது.
ஆனால் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. எனவே ஜனநாயகன் படத்திற்கு நாங்கள் நேரடியாக சென்சார் சான்றிதழ் கொடுக்க முடியாது.
தேர்தல் ஆணையம் இப்படத்தை பார்த்து தடையில்லா சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே நாங்கள் சான்று கொடுப்போம் என்று சென்சார் போர்ட்டின் மறு தணிக்கை குழு தெரிவித்துவிட்டதாம். எப்படியும் இந்த மாதமே சென்றார் சான்று கிடைத்துவிடும் என்று நம்பி இருந்த படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மறு தணிக்கை குழு அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.