30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!! சூப்பர் ஸ்டாரை ஒதுக்கி வரும் 53 வயது நடிகை.. இந்த லிஸ்ட்டில் ஜெயலலிதாவுமா?

Rajinikanth J Jayalalithaa Sukanya
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் பிஸியான படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தில் நடிகை தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அவருடன் எப்படியாவது நடித்திடவேண்டும் என்ற ஆசை வரும். அப்படி ஸ்ரீதேவி முதல் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை பலர் நடித்துள்ளனர்.

30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!! சூப்பர் ஸ்டாரை ஒதுக்கி வரும் 53 வயது நடிகை.. இந்த லிஸ்ட்டில் ஜெயலலிதாவுமா? | Actresses Felt Sad To Cant Act Wtih Rajni

ஆனால் ஒருசில முன்னணி நடிகைகளால் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதில் ஒருவராக இருப்பவர் நடிகை சுகன்யா. கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்த சுகன்யா 30 வருட சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போனதாம்.

அந்தவகையில் முத்து படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சுகன்யாவை நடிக்க வைக்க கேட்டு ஆள் அனுப்பியும் அந்த தகவல் அவரை சென்று சேரவில்லையாம். மீனா ரோலுக்கு எனக்கு வாய்ப்பு வந்தும் அதில் நடிகை சுகன்யாவால் நடிக்க முடியாமல் போனது.

30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!! சூப்பர் ஸ்டாரை ஒதுக்கி வரும் 53 வயது நடிகை.. இந்த லிஸ்ட்டில் ஜெயலலிதாவுமா? | Actresses Felt Sad To Cant Act Wtih Rajni

அவரை போல் நடிகை ஜெயலலிதாவும் ரஜினிகாந்துடன் பில்லா படத்தில் ஸ்ரீபிரியா ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

அதேபோல் ரங்கா படத்தில் கே ஆர் விஜயா ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அரசியல் பயிற்சியில் இருந்ததால் ஜெயலலிதாவால் நடிக்க முடியாமல் போனதாம். இதை ஆங்கிலப்பத்திரிக்கையொன்றிற்கு ஜெயலலிதா கடிதம் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.