அந்த உறவில் இருக்க சித்தார்த்துக்கு அதிதி ராவ் போட்ட கண்டிஷன்!! என்ன தெரியுமா?
ஹிந்தி மொழி படங்களில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை அதிதி ராவ்.இவர் தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதிதி ராவும், பிரபல நடிகரான சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் நிச்சியதார்தம் செய்துகொண்டது குறித்து சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே சித்தார்த்துக்கு, அதிதி ராவ் சில கண்டிஷன்கள் போட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அந்த கண்டிஷன் என்னவென்றால், திருமணத்திற்கு பின்பும் நடிப்பதற்கு எந்த ஒரு தடையும் இருக்க கூடாது, கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி ரோலில் நடிப்பேன், ஷூட்டிங் எங்கு நடந்தாலும் அனுமதி கொடுக்க வேண்டும் போன்ற கண்டிஷன்களை அதிதி போட்டதாகவும் அதற்கு சித்தார்த்தும் ஓகே சொல்லிவிட்டதாகம் கூறப்படுகிறது.