இவரு பெயரா? ஜெய்பீமை தொடர்ந்து மாநாடு-க்கு ரூட்டை மாற்றும் 5 கோடி குரூப்!

சினிமாவை பொறுத்த வரை கருத்த்துக்களை கற்பனை நயத்தோடு கூறுவதுதான். அப்படி கூறும் படங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் புகாரளித்து வழக்கையும் போட்டு வருகிறார்கள் தற்போதைய தமிழ் சினிமாவில்.

அந்தவகையில் விஜய் படங்கள் வந்தாலே எதாவது பிரச்சனை வரும். அதேபோல் சிம்பு, சூர்யா படங்கள் கூட கருத்து என்றதை மையமாக எடுத்து சிக்கலில் சிக்குவதுண்டு. அப்படி நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் கேலெண்டர் படத்தால் பெரிய பிரச்சனையை சந்தித்து வன்னியர் சமுகத்தினர் 5 கோடி நஷ்டயீடு கேட்டு மிரட்டி வருகிறார்கள்.

இதை நெட்டிசன்கள் பயன்படுத்தி மீம்ஸ்களை பல வகையில் போட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் சிம்புவின் மாநாடு படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் போஸ்டர் ஒன்றில் சிம்பு கைக்கடிகாரத்தை பார்ப்பது போன்றுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள், போஸ்டர்ல வாட்ச் இருக்கு வாட்ச் கடிகாரம் மணி பாக்குறது என மணி- அன்புமணி என்று கூறி மனதை புன்படுத்திட்டானுக 5 கோடி நஷ்டயீடு வேண்டும் என்று மீம்ஸ் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Gallery Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்