கணவருடன் நடிக்க மறுத்தது இதற்காக தான்.. ஐஸ்வர்யா ராய் என்ன இப்படி சொல்லிட்டாரு
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவரும் இணைந்து குரு, தூம் 1 மற்றும் 2, Kuch Naa Kaho, Dhaai Akshar Prem Ke போன்ற பல படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், ஒரே ஒரு திரைப்படத்தில் தனது கணவருடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். அந்த படம் தான் ஃபரா கான் இயக்கத்தில் வெளிவந்த ஹாப்பி நியூ இயர் திரைப்படம்.
இந்நிலையில், எதற்காக மறுப்பு தெரிவித்தேன் என்பது குறித்து முன்பு பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் வெளிப்படையாக கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்காக தான்
அதில்,"சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட இப்படத்தில் நடிக்க என்னிடம் கேட்டனர். நானும் இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், படத்தில் எனக்கு அபிஷேக் பச்சனுக்கும் சங்கடமான சில சூழல்கள் இருந்தன.
நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பதற்கு பதிலாக, நான் வேறு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியிருந்தது. இந்த தர்மசங்கடமான சூழலை தவிர்க்கவே அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்" என கூறியுள்ளார்.