அஜித்தின் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. இந்த நடிகர் படத்தின் காப்பியா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் வலிமை படத்தின் போனி கபூர், எச் வினோத் கூட்டணியில் மீண்டும் இணைந்திருந்தார். ஏகே61 என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது அஜித் பைக் ரைட் எல்லாம் முடித்துவிட்டு படப்பிடிப்பினை துவங்கி விட்டார் என்ற செய்தியும் வெளியாகியது.
இந்நிலையில் பிரபல பிஆர்ஒ ரமேஷ் பாலா இன்று மாலை 6.30 மணியளவில் அஜித்தின் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
அவர் சொன்னது 6.30 மணிக்கு காத்திருந்தபடியே போனி கபூர் அவர்கள் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டார். துணிவு என்ற டைட்டில் மாஸ் லுக்கில் அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் இணையத்தினை அதிரவைத்து வந்தனர்.
இந்நிலையில் துணிவு படத்தின் அஜித் உட்கார்ந்திருக்கும் போஸ் ஏற்கனவே நடிகர் பவண் கல்யாண் நடித்த வக்கீல் சாப் போஸ்டரை போன்றுள்ளது என்று பலர் கலாய்த்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
