அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு நடிகையின் வீட்டுக்கு அழைத்த மாமா!! டி ராஜேந்தர் சொன்ன வார்த்தை
டி ராஜேந்தர்
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையை வைத்து தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் டி ராஜேந்தர். அவர் பற்றி அந்த காலத்தில் இருந்தும் தற்போது வரை எந்தவொரு கிசுகிசுக்களும் வந்ததில்.
அந்தவகையில் டி ராஜேந்தரை நடிகை ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்த ஒரு விஷயத்தை பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். பிரபலமான ஒரு நடிகை பின்னாளில் இன்னொரு பிரபலமான நடிகரை திருமணம் செய்தார். அவர் இப்போதும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அந்த நடிகையை தன் படத்தில் அறிமுகப்படுத்தியபோது, அந்த நடிகையின் மாமாவே, டி ராஜேந்தரிடம் சென்று அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகையின் வீட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கு டி ராஜேந்தர், அந்த பொண்ணை ஒழுங்காக நடிச்சு தரச்சொல் போது என்று கூறியிருக்கிறார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் டி ராஜேந்தர் போல் இருக்க மாட்டார்கள் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.