நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிய சீரியலை புகழ்ந்து தள்ளிய அனுஷ்கா.. அவருடைய அம்மாவும் இந்த சீரியலின் ரசிகையாம்
அனுஷ்கா ஷெட்டி
அருந்ததி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
இப்படத்தின் வெற்றிகாரணாமாக தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அருந்ததி படத்திற்கு பின் அனுஷ்காவிற்கு அடையாளமாக அமைந்தது பாகுபலி திரைப்படம்.
தமிழ் சீரியலை பாராட்டிய அனுஷ்கா
இந்நிலையில், நடிகை அனுஷ்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்ன தொடும் சீரியலின் ரசிகையாம். அவர் மட்டுமின்றி அனுஷ்காவின் தாயாரும் இந்த சீரியலின் தீவீர ரசிகையாம்.
தொடர்ந்து 15 எபிசோட்கள் பார்த்து முடித்த நடிகை அனுஷ்கா உடனடியாக அந்த சீரியலின் ஹீரோ வினோத் மற்றும் ஹீரோயின் பவித்ராவிற்கு பெர்ஸ்னலாக கால் செய்து பாராட்டியுள்ளாராம்.
அவர்கள் மட்டுமின்றி மொத்த சீரியல் படக்குழுவினரையும் அனுஷ்கா ஷெட்டி பாராட்டியதாக நடிகர் வினோத் மற்றும் பவித்ரா கூறியுள்ளார்கள். இந்த அளவிற்கு முன்னணி நடிகையிடம் இருந்து பாராட்டை பெற்றுள்ள இந்த சீரியலை ஆரம்பகால கட்டத்தில் பலரும் கலாய்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.