அவரின் உரிமையை மறுக்க முடியாது..அவமானப்படுத்துவந்து சரியல்ல!! ஏ ஆர் ரஹ்மானுக்காக மகள்கள் சப்போர்ட்..
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான், இந்தி திரைப்படத்துறையில் நிலவும் பாரபட்சம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ஏ ஆர் ரஹ்மானுக்காக மகள்கள்
இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மலையாள இசையமைப்பாளர் கைலாஷ் மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பக்ரிந்திருந்தார். இதனையடுத்து ஏ ஆர் ரஹ்மானின் மகள்கள் கதீஜா, ரஹீமா ஆகியோரும் தங்களது கருத்தினை கூறியிருக்கிறார்கள்.

அதில், ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருப்பதாகவும் அவரது கருத்துடன் மாறுபடலாம், ஆனால் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையை மறுக்கமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகமே மதிக்கும் ஒரு கலைஞரை அவமானம் என்று அழைப்பதும், அவரது படைப்புகளை கேலி செய்வதும் ஆரோக்கியமான விமர்சனம் அல்ல என்றும் இது வெறுப்பு பேச்சு, ஒருவரது கருத்தை மெளனமாக்குவதற்காக அவருடைய நேர்மையை தாக்குவது அல்லது அவரை பொதுவெளியில் அவமானப்படுத்துவது முற்றிலும் நியாமற்றது என்றும் தெரிவித்துள்ளார்கள்.