மீண்டும் கர்ப்பமான அட்லீ மனைவி பிரியா!! பேபி பம்ப் போட்டோஷூட்..
அட்லீ - பிரியா
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த அட்லீ, விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

இதனையடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.
அட்லீ நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கடந்த 2023 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஆண் குழந்தையை பெற்றார். தற்போது அட்லீ - பிரியா தம்பதியினருக்கு விரைவில் இரண்டாம் குழந்தை பிறக்கவுள்ளது.

பிரியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார். இதனால் எங்கள் வீடும் குடும்பமும் அழகாக மாறப்போகிறது. ஆமாம், நாங்கள் மீண்டும் கர்ப்பமாகி விட்டோம். உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் பிராத்தனையும் வேண்டும். இப்படிக்கு அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூஃபி என்று குடும்பத்துடன் எடுத்த பேபி பம்ப் போட்டோஷூட்டை பகிந்துள்ளார்.