மிருணாள் தாகூருக்கு முன் தனுஷுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியது இத்தனை நடிகைகளா?
நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பு திறமையால் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நிரூபித்து வரும் நிலையில், நடிகர் மிருணாள் தாகூரை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், தனுஷோ, மிருணாளோ இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் வதந்திகள் ஓயாமல் இருக்கிறது. தனுஷ் பற்றி இதுபோன்ற வதந்திகள் வருவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன் சில நடிகைகளுடன் தனுஷ் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்.

கிசுகிசுவில் நடிகைகள்
முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தின்போது தனுஷுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதி ஹாசனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ், ஹீரோயினாக நடித்த அமலா பால் கெமிஸ்ட்ரியும் ஒன்றாக ஒர்க்கவுட் ஆனதை வைத்து இருவரும் காதலில் இருப்பதாக தகவல் வெளியானது.

பல வருடங்களுக்கு முன் தனுஷ், திரிஷா இடையே நல்ல நட்பு இருந்தநிலையில் இருவரும் சில பார்ட்டிகளில் ஒன்றாக காணப்பட்டதால் அவர்களுக்குள் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியழ்து.
தற்போது தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.