விபத்தில் இறந்த ஒரேவொரு மகன்..பண்ணைவீடு, தோட்டம், 500 சவரன் போச்சு!! புலியூர் சரோஜாவின் மறுப்பக்கம்..

Tamil Actress Actress Cinema Update Cinema News
By Edward Jan 20, 2026 07:30 AM GMT
Report

புலியூர் சரோஜா

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவிற்கு சிறுவயதில் இருந்தே இசை, நடனம் மீது ஆர்வம் இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. சரோஜாவின் தந்தைக்கு தன்னைப்போல் தன்னுடைய மகளையும் மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

விபத்தில் இறந்த ஒரேவொரு மகன்..பண்ணைவீடு, தோட்டம், 500 சவரன் போச்சு!! புலியூர் சரோஜாவின் மறுப்பக்கம்.. | Dance Master Puliyur Saroja Painful Life Story

ஆனால் டான்சில் சாதிக்க வேண்டும் என்று ஆசையால் 9ஆம் வகுப்புக்கு மேல் சரோஜாவிற்கு படப்பில் கவனம் செல்லவில்லை. தன்னுடைய ஆசையை அப்பாவிடம் சொல்ல, நடனப்பள்ளியில் சேர்ந்து அங்கு அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு பாட்டுப்பாடி நடனமாடி கவனத்தை ஈர்த்தார் சரோஜா.

மாதம் 45 ரூபாய் சம்பளத்திற்கு ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்து மதன காமராஜன் படத்தில் குழு நடனம் மூலம் படத்தில் அறிமுகமாகினார். பின் ஜெமினியில் இருந்து விலகி ஜுபிடர் நிறுவனத்திற்கு மாறி, தன் திறமையால் க்ரூப் டான்சராக இருந்து டான்ஸ் மாஸ்டராக மாறினார்.

விபத்தில் இறந்த ஒரேவொரு மகன்..பண்ணைவீடு, தோட்டம், 500 சவரன் போச்சு!! புலியூர் சரோஜாவின் மறுப்பக்கம்.. | Dance Master Puliyur Saroja Painful Life Story

விபத்தில் இறந்த ஒரேவொரு மகன்

80 காலக்கட்டத்தில் கமல், ரஜினி, பிரபு, சில்க், டிஸ்கோ சாந்தி என முன்னணி நட்சத்திரங்கள் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டாராக இருந்தார். கொடிக்கட்டி இருந்தவர் தற்போது யாருமே இல்லாமல் தனியாக வாழ்க்கையை கழித்து வருகிறார். நடிகர் ஜி சீனிவாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து சத்யா என்ற ஒரே மகனை பெற்றெடுத்தார். மகன் சத்யா விபத்தொன்றில் சிக்கி இறந்துவிட உடைந்து போன சரோஜாவுக்கு அந்த துயத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அந்நேரத்தில் நான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததால், யார் எங்கே கையெழுத்து கேட்கிறார்களோ அங்கே கையெழுத்து போடுவேன். வளசரவாக்கத்தில் மட்டும் 3 வீடு இருந்தது. 8 ஏக்கர் நிலம், தோட்டம், பண்ணைவீடு, 500 சவரன் நகை என அனைத்தும் போச்சு, எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து. அப்போது தான் மகன் பெயரில் ஸ்கூல் கட்டவேண்டும் என்று நினைத்து கையில் இருந்த பணம், நகையை போட்டு அவன் பெயரிலேயே இந்த பள்ளியை கட்டினேன்.

விபத்தில் இறந்த ஒரேவொரு மகன்..பண்ணைவீடு, தோட்டம், 500 சவரன் போச்சு!! புலியூர் சரோஜாவின் மறுப்பக்கம்.. | Dance Master Puliyur Saroja Painful Life Story

கடந்த 32 வருடமாக நல்லபடியாக இந்த பள்ளியை நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு என் கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார், இப்போது எனக்குனு இந்த ஸ்கூலைத்தவிர யாரும் இல்லை, என் மகனை நினைத்து, இந்த பள்ளியிலேயே வாழ்ந்து வருகிறேன். இந்த ஸ்கூல் ஒன்று தான் என் மனதிருப்தி என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் புலியூர் சரோஜா.