விஜய் எனக்கு அண்ணன் இல்லை..தளபதி அம்மாவின் சகோதரர் மகள் கீர்த்தனா ஓபன் டாக்..
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் தள்ளி போயுள்ளது. இன்று வரை இப்படத்தின் சென்சார் சான்றிதழ் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. படம் இந்த மாதம் வெளியாகுமா ஆகாதா? என்ற எதிர்ப்பார்ப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

கீர்த்தனா
இந்நிலையில் நடிகர் விஜய்யின் உறவினர் பெண்ணான கீர்த்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் எனக்கு அண்ணன் இல்லை, மாமா முறை தான்.
சின்ன வயதில் இருந்து அண்ணன் என்று தான் கூப்பிட்டு வந்தோம். ஆடியோ லான்ச்சிற்கு நான் சென்றது, ரசிகர்களுக்கு எப்படி இருந்ததோ அதேபோல் தான் எனக்கும் என் சகோதரி பல்லவிக்கும் இருந்தது. விஜய்யின் தங்கை புகைப்படம் என்று தேடினால் என்னுடைய புகைப்படம் தான் வருகிறது.

ஆனால் எங்கள் அப்பாவுடன் பிறந்தவர்கள் தான் ஷோபா அத்தையும், விக்ராந்தின் அம்மா ஷீலா அத்தையும். எங்கள் அப்பாவும் சினிமாத்துறையில் இருந்தவர்தான் விஜய் மாமா நடித்த முதல் படம் வெற்றி(குழந்தை நட்சத்திரம்), அந்த படத்தின் கதையை எழுதியது என்னுடைய அப்பாதான் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.