இப்படி ஒரு அரபிக் குத்து டான்ஸ்-ஆ? வைரலாகும் விஜய் ரசிகரின் டான்ஸ்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். படம் ஆரம்பித்து ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது.
படம் ஓரளவிற்கு வரவேறுபு பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. அதிலும் இப்படத்தின் பாடல் படம் வெளியாவதற்கு முன் அனிருத் இசையில் பெரியளவில் பேசப்பட்டு வைரலானது. அதில் ஒன்று தான் அரபிக் குத்து.
சிவகார்த்திகேயன் வரியில், அனிருத், ஜோனிதா காந்தி பாடி வெளியான இப்பாடல் தற்போது வரை 44 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 7 மில்லியன் லைக்ஸ்களை பெற்று வரும் இப்பாடலை கொண்டு பலர் டப்மாஷ் செய்து ஆட்டம் போட்ட வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் சமீபத்தில் ஒரு இளைஞர்கள் குழு அப்படியே அரபிக் குத்து பாட்டின் செட்டை அமைத்து நடனமாடி வீடியோவினை வெளியிட்டுள்ளனர். விஜய், பூஜா ஹெக்டேவை போன்று இருவரும் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
A Fan Made ??❤ #ArabicKuthu @Jagadishbliss @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Beast ▪︎ #Varisu ▪︎ @Actorvijay pic.twitter.com/IIqAdXjg9f
— Namakkal OTFC (@Namakkal_OTFC) June 29, 2022
![Gallery](https://cdn.ibcstack.com/article/f8e58ed7-f4ae-4740-b04e-fef3476041e7/22-62bdb68ee1b7d.webp)