தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததே விஜய் சேதுபதி தானா? கொந்தளிக்கும் அர்னவ் ரசிகர்கள்..
அர்னவ் எவிக்ட்
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மெதுமெதுவாக சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது. 18 போட்டியாளர் வீட்டிற்கு அனுப்பட்ட ஒரு வாரத்தில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்படு வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஜே. விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெஃப்ரி, அர்னவ் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்தனர். அதில் குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார்.
அர்னவ் ரசிகர்கள்
எவிக்ட்டாகி வெளியேறிய அர்னவ், போட்டியாளர்களை கண்டபடி திட்ட, கடுப்பான விஜய் சேதுபதி வன்மத்தை கக்கும் இடம் இது இல்லை, அநாகரீகமாக பேசக்கூடாது என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார்.
ஆனால் இதை விஜய் சேதுபதி தான் பேச வைத்ததாகவும் அதில் கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து விஜய் சேதுபதி பர்ஃபார்ம் செய்து அர்னவை விளாசி எடுத்துவிட்டார் என்றும் அர்னவ் ஆர்மியினர் விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி முழுவதும் ஜால்ராஸ் என ஆண்கள் அணியை சேர்ந்த தீபக், விஷால், அருண், சத்யா என அவர் சொன்ன வீடியோக்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவையே பகிர்ந்திருக்கிறார். வெளியே போயும் இவர் திருந்தவில்லை என்றும் விஜய் சேதுபதிக்கு செம பதிலடி என்று கூறி வருகிறார்கள்.