அட்லீக்கு தண்ணி காட்டும் கிங் கான்! மும்பையில் செட்டிலாகியும் எதுவும் நடக்கலையே..

Shah Rukh Khan Atlee Kumar
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராகியவர் அட்லீ. முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ அடுத்த படமே தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தினை இயக்கினார்.

படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து விஜய்யுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களை கொடுத்தார். மூன்று படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைதொடர்ந்து விஜய் உட்பட பல நடிகர்கள் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தனர்.

இதனால் ஹாருக்கானுக்கு ஒரு தூண்டில் போட்டு தற்போது படத்தினையும் தொடங்கிவிட்டார். ஷாருக்கான், நயன் தாரா, யோகிபாபு நடிப்பில் லயன் படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. கொரோனா லாக்டவுன், ஷாருக்கான் மகன் பிரச்சனை என படப்பிடிப்பு தள்ளி சென்று கொண்டே போனது.

இதனால் அட்லீ மும்பையிலேயே செட்டிலாகும் நிலையில் இருந்தார். மும்பையில் பிரபல ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்த ஷாருக்கான் மனைவியுடன் அட்லீ அங்கேயே இருந்து வந்தார். தற்போது மீண்டும் கோவாவில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷாருக்கான் அந்த காட்சி சரியில்ல அந்த ஏரியா சரியில்லை என்று இழுத்தடித்து வருகிறாராம். இதனால் அட்லீ அப்செட்டாகியிருக்கிறாராம்.

இப்படத்தால் தான் வாழ்க்கையே அடங்கி இருப்பதால் அட்லீ பொருமையுடன் இருந்து வருகிறாராம். போகிற போக்கை பார்த்தால் கடைசியில் அடுத்த ஆண்டு கூட இப்படம் வெளியாகாமல் போய்விடுமோ என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.