பாரதி கண்ணம்மா ரத்தக்கண்ணம்மா-வாக மாறிட்டாங்களே.. சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Bharathi Kannamma Serials
By Edward Sep 15, 2022 06:10 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஒரு கதையை அங்கும் இங்குமாக கதையை வளைத்து வளைத்து எடுத்து வருகிறார் சீரியல் இயக்குனர். தற்போது பீஸ்ட் படபாணியில் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜேக் செய்துவிடும் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

கொலைக்காரியான கண்ணம்மா

தீவிரவாதிகளில் ஒருவன் பிடியில் வைத்திருக்கும் பெண்களை சீரழித்து வந்த நிலையில் அதில் கண்ணம்மாவையும் வலையில் சிக்க வைத்துள்ளார். அதற்காக தனியாக அழைத்து செல்லப்பட்ட கண்ணம்மாவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளான்.

தன் கையில் வைத்திருந்த கத்தரியால் கழுத்தில் குத்தி கண்ணம்மா கொலைக்காரியாக மாறுகிறார்.

இதற்கு பிரமோ வீடியோவில் அம்மன் எப்படி ஆக்ரோஷமாக காணப்படுவாரோ அப்படியாக இயக்குனர் காண்பித்திருப்பார். இதனை பலர் கிண்டல் செய்து இந்த சீரியலுக்கு எண்ட் கார்ட்டே இல்லையே என்று புலம்பி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.