பிக்பாஸ் தமிழ் சீசன் 9!! வீட்டிற்குள் வருகை தந்த போட்டியாளர்கள்.. LIVE..
பிக்பாஸ் தமிழ் சீசன் 9
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 இன்று அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலமிறங்கவுள்ளார்கள் பிக்பாஸ் சீசன் 9ல் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற லிஸ்ட் அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9 கிராண்ட் லான்ச் நிகழ்ச்சி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் உள்ளே..
முதல் ஆளாக வாட்டர்லெமன் சுதாகர் பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவரை தொடர்ந்து 2வது போட்டியாளராக அரோரா சின்க்ளேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
மூன்றாவது போட்டியாளராக நடிகர் FJ (Fredrick John )என்பவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் சுழல் வெப் தொடரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து 4வது போட்டியாளராக விஜே பார்வதி உள்ளே வந்துள்ளார்.
அவரை தொடர்ந்து 5வது போட்டியாளராக துஷர் என்பவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
6வது போட்டியாளராக குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி திரு வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.
இவர்களை தொடர்ந்து சீரியல் நடிகர் சபரிநாதன் 7வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
8வது போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி வீட்டிற்குள் சென்றுள்ளார்.
9வது போட்டியாளராக குக் வித் கோமாளி கெமி, 10வதாக சீரியல் நடிகை ஆதிரை உள்ளே வந்துள்ளார்கள்.
பின் 11வதாக ரம்யா ஜோ மற்றும் 12வதாக கானா வினோத் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்குப்பின் 13வதாக வியானா மற்றும் 14வதாக பிரவீன் ராஜ் தேவ், 15வதாக சிபிக்ஷா குமாரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
16வது போட்டியாளராக திருநங்கை மாடல் அப்சரா CJ கலந்து கொண்டுள்ளார், 17வது போட்டியாளராக விக்காஷ் விக்ரம், 18வது போட்டியாளர் நந்தினி R , சீரியல் நடிகர் கம்ருதீன் 19வது பொட்டியாளர், கலையரசன் 20வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.





