ரெட் கார்ட் கொடுத்த விஜே பிரியங்கா.. நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிக்பாஸ் நடிகை வனிதாவுக்கே

Bigg Boss Priyanka Deshpande Star Vijay Vanitha Vijaykumar
By Edward Feb 23, 2024 07:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி டிரெண்ட்டானவர் நடிகை வனிதா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.

ரெட் கார்ட் கொடுத்த விஜே பிரியங்கா.. நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிக்பாஸ் நடிகை வனிதாவுக்கே | Biggboss Vanitha Got Redcard From Vj Praiyanka

அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்களையும் பகிர்ந்தும் வருகிறார். சமீபத்தில் 18 வயது நிரம்பிய தன் மகள் ஜோவிகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தார்.

மகளுக்கு சப்போர்ட் செய்து பேசிய வனிதா இணையத்தில் நெட்டிசன்களின் வெறுப்பை சம்பாதித்ததோடு பிரதீப் ஆண்டனிக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் நியாயமானது என்றும் பேசிய விமர்சனத்திற்குள்ளாகினார்.

தாலியை கையில் எடுத்த விஜய்.. கடுமையாக திட்டிய மனைவி சங்கீதா

தாலியை கையில் எடுத்த விஜய்.. கடுமையாக திட்டிய மனைவி சங்கீதா


இந்நிலையில் விஜே பிரியங்கா - மாகாபா அனந்த் தொகுத்து வழங்கி வரும் ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா என்ற நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கில் ரூல்ஸை மீறியதாக பிரியங்கா வனிதாவுக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளார். இதனால் வனிதா, பிரியங்காவை முறைத்தபடி பார்க்கும் பிரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.